Monday 31 July 2017

Saranam saranam idhayam saranam song(சரணம் சரணம் இதயம் சரணம் பாடல் )


lyrics
 
சரணம் சரணம் இதயம் சரணம் 
இயேசுவின் இதயம் சரணமே 
அன்பின் முழுமை இதயம் சரணம் 
இயேசுவின் இதயம் சரணமே 

தேற்றும் இதயமே ஆசீர் வழங்குமே 
அணைக்கும் இதயமே என்றும் சரணம் சரணமே 
   1
இருதய அன்பில் ஆனந்தம் பொங்கிடும் 
இறைவழி வாழ ஆறுதல் நிறைந்திடும் – 2
அன்னைபோல நம்மைத் தாங்கும் 
இயேசுவின் இதயம் சரணம் சரணம் 
   2 
இருதய அன்பில் புதுமைகள் நிறைந்திடும் 
குறையின்றி வாழ நல்வழி கிடைத்திடும் – 2
பாதை தந்து பயணம் செல்ல 
நடத்தும் இதயம் சரணம் சரணம் 
             3
இருதய அன்பில் வரங்களை பொழிந்திடும் 
நோயின்றி வாழ நலம்பல வழங்கிடும் – 2
விரும்பி வந்து குணமளிக்கும் 
இதய ஆண்டவா சரணம் சரணம் 

Monday 24 July 2017

Holy Spirit Song (தூய ஆவியின் பாடல்)



lyrics
 
ஆவியே தூய ஆவியே 
ஆட்கொள்ள வருவீர் ஆவியே -2
              1
வருவீர் அனலாய் உருமாற்ற 
வருவீர் துணையாய் வழிநடத்த -2
              2
வரங்கள் கனிகள் பொழிந்திடுவீர் 
வளமுடன் வாழ வரம் தருவீர் -2
              3
சோதனை அணுகா காத்திடுவீர்  
சோதிக்கும் சாத்தானை வென்றிடுவீர் -2
              4
வல்லமையாலே நிறைத்திடுவீர் 
சாட்சியாய் வாழ செய்திடுவீர்  - 2 

Saturday 22 July 2017

Theme Music of Sacred Heart of Jesus (திரு இருதய ஆண்டவரை நோக்கிய மனவலிய செபம் பாடலாக)




lyrics
 
இயேசுவின் திரு இருதயமே எனது நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன் 

Friday 21 July 2017

Slogan of Sacred Heart Of Jesus ( மனதிற்கு இதம் தரும் இயேசுவின் திரு இருதயத்தின் சுலோகம் )



lyrics
 
இயேசுவின் இருதயமே என்னைக் காக்கும் இதய தெய்வமே – 3
இயேசுவின் இருதயமே உம் அன்பினாலே என்னை நிரப்புமே – 3
இயேசுவின் இருதயமே உம் கருணையாலே குணப்படுத்துமே – 3 

Thursday 20 July 2017

Arulin aalayam shrine song(அருளின் ஆலயம் திருத்தல பாடல்)


lyrics
 
அருளின் ஆலயம் நம் இடைக்காட்டூர் ஆலயம் 
அன்பின் ஆண்டவர் திரு இருதய ஆண்டவர் 
வந்தோம் இதயம் கண்டோம் ஆனந்தம் ஆனந்தமே 
செல்வோம் அன்பைச் சொல்வோம் எந்நாளும் என்னாளுமே 
              1
வைகை ஆற்றின் கரையினிலே 
வானதூதர்கள் எழுப்பிய ஆலயம் சேர்ந்தோம் 
இதய அன்பு இறங்கிட கண்டோம் 
இரக்கத்தின் இனிமையை இங்கேதான் உணர்ந்தோம் 
            2
என்றென்றும் எமக்காக 
மன்றடும் நாற்பது தூயவர் கண்டோம் 
மண்ணகம் விண்ணகம் இணைந்திடக் கண்டோம் 
மாறாத அன்பில் என்றுமே வாழ்வோம் 

Christhuvin Aathumamae song (கிறிஸ்த்துவின் ஆத்துமமே பாரம்பரிய பாடல் )



lyrics
 
கிறிஸ்துவின் ஆத்துமமே என்னை அர்ச்சியும் 
கிறிஸ்துவின் தேகமே என்னை ரட்சியும் 
கிறிஸ்துவின் இரத்தமே என்னை பூர்ப்பியும் 
திருவிலாத் தீர்த்தமே என்னை தூய்ப்பியும் 
     1
கிறிஸ்துவின் பாடுகள் என்னைத் தேற்றிட 
அருள்நிறை இயேசுவே என்னை தேற்றிடும் 
அரிய காயங்களுள் என்னை வைத்திடும் 
பிரிந்திடா வண்ணமாய் என்றும் கட்டிடும் 
    2
பொருது சத்ருவிடம் நின்றே காத்திடும் 
மரண வேளையிலே என்னை கூப்பிடும் 
பரகதியில் நிதம் உம்மை வாழ்த்தவே 
வருகவென்றன்போடு என்னை ஏவிடும் 

Tuesday 18 July 2017

yesuvin idhayamae potri bhajan -3 (இயேசுவின் இதயமே போற்றி பஜன் )


yesuvin idhayamae potri bhajan - 2 (இயேசுவின் இதயமே போற்றி பஜன் )


YESUVIN IDHAYAMAE POTRI BHAJAN 1(இயேசுவின் இதயமே போற்றி பஜன் )


Iruthaya arasae song (இருதய அரசே நீர் வாழ்க)



lyrics
 
இருதய அரசே நீர் வாழ்க – எம் 
இதயங்களில் உம தயை வாழ்க 
இடைக்காட்டூர் மண்ணில் அமர்ந்தவரே 
எம்மை இடைவிடாது தினம் காப்பாவரே – 2
எந்த தீங்கும் விளக்கி காத்திடுவீர் 
      1
அளவற்ற மகத்துவம் நிறைந்தவரே – என்றும் 
தாளம் சிநேகம் நிறைந்தவரே – 2
இதயமெல்லாம் எம்மை ஆள்பவரே – தினம் 
நிறைவினை ஆக்கும் தூயவரே 
எல்லா ஆராதனைக்கும் உரியவரே 
     2
பொறுமையும் தயாளமும் நிறைந்தவரே 
விண்ணக வாசலாய் இருப்பாவரே – 2
இறைவனின் புனித ஆலயமாய் இங்கு 
அரசாட்சி செய்யும் உன்னதரே 
எங்கள் பாவம் முழுதும் தீர்ப்பவரே 

En Sumai Elithu (என் சுமை எளிது பாடல் )



lyrics
 
என் சுமை எளிது என் நுகம் இனிது 
என்று மொழிந்தவரே 
வருந்தி சுமக்கும் மாந்தரே என்னிடம் 
வாருங்கள் என்றவரே 
நீரே என் அடைக்கலம் – 2
இயேசுவின் இருதயமே – இறை 
இயேசுவின் இருதயமே 
      1
இரக்கத்தின் ஊற்றாம் இறைவா 
எம் ஜெபம் கேட்டருள்வீர் 
ஏழைகளை செல்வராக்கும் 
இதயமே உமதன்றோ – கருணை
இதயமே உமதன்றோ
     2
நீயல்லால் உலகில் வேறு 
நிலையான அரண் இல்லையே 
தாய் என்னை வெறுத்திட்ட போதும் 
நீ என்னை மறப்பதில்லை – என்றும் 
நீ என்னை இகழ்வதில்லை 

Friday 14 July 2017

எனது இருதய அன்பில் பாடல் (enathu iruthaya anbil song)



lyrics
 
எனது இருதய அன்பில் நிலைத்திருந்தால் 
எல்லா நன்மைகளும் நீங்கள் பெறுவீர்கள் – 2
              1
சுமை சுமந்து சோர்ந்த என் இதயங்களே 
உங்களின் துயரம் எந்தன் தோள்களிலே 
உங்களுக்காக நான் பிறந்தேன் 
சிலுவை மரத்தில் இரத்தம் சிந்தினேன் 
கல்வாரியில் பலியானேன்  ஆ.. ஆ.. ஆ.. 
              2
ஏழை எளிய மனதோடு வாழ்பவரே 
மனதினில் தாழ்ச்சியும் இரக்கமும் உள்ளோரே 
விண்ணகப் பேரின்பம் உங்களுக்கே 
என் திருக்கரங்களால் ஆசீர் அருள்வேன் 
இதயத்தில் சுமந்திடுவேன் ஆ.. ஆ.. ஆ.. 

இயேசுவின் திவ்ய இருதயமே பாடல் (yesuvin dhivya iruthayamae song)



lyrics(வரிகள் சொந்தமானது)
 
இயேசுவின் திவ்ய இருதயமே என்மேல் இரக்கம் வையும் – 2

1. என் ஜெபதபம் அனைத்தையும் ஒப்புக்கொடுத்தேன்
       என் அனுதின செயல்களை ஒப்புக்கொடுத்தேன்
2. என் இன்பத்தையும் துன்பத்தையும் ஒப்புக்கொடுத்தேன்
       என் குடும்பம் முழுதையும் ஒப்புக்கொடுத்தேன்
3. என் உடல்நோய் அனைத்தையும் ஒப்புக்கொடுத்தேன்
       என் மனநோய் அனைத்தையும் ஒப்புக்கொடுத்தேன்
4. என் சோதனை அனைத்தையும் ஒப்புக்கொடுத்தேன்
       என் வேதனை அனைத்தையும் ஒப்புக்கொடுத்தேன்
5. என் கடன் தொல்லை அனைத்தையும் ஒப்புக்கொடுத்தேன்
       என் கஷ்ட்டங்கள் அனைத்தையும் ஒப்புக்கொடுத்தேன்
6. என் வெற்றிகளை தோல்விகளை ஒப்புக்கொடுத்தேன்
       என் பெருமை வீண் பேச்சுகளை ஒப்புக்கொடுத்தேன்
7. என் தேவைகள் அனைத்தையும் ஒப்புக்கொடுத்தேன்
       என் வேண்டுதல் விண்ணப்பத்தை ஒப்புக்கொடுத்தேன்
8. என் தொழில்கள் அனைத்தையும் ஒப்புக்கொடுத்தேன்
       என் வியாபாரம் அனைத்தையும் ஒப்புக்கொடுத்தேன்
9. என் கேன்சர் கட்டிகளை ஒப்புக்கொடுத்தேன்
       என் இதய நோய்களை ஒப்புக்கொடுத்தேன்
10. என் சகோதர சண்டைகளை ஒப்புக்கொடுத்தேன்
       என் குடும்ப பிரச்சனையை ஒப்புக்கொடுத்தேன்

உம்மால் கூடுமே பாடல் (Ummal Koodume Song)



lyrics
 
உம்மால் கூடுமே எல்லாம் கூடுமே 
எல்லாம் கூடுமே உம்மால் கூடுமே 
ஆண்டவரே தாவீதின் திருமகனே – 2
மனமிரங்கும் மனமிரங்கும் என் மீது மனமிரங்கும் – 2
                   1
உன் கரங்கள் என்சிரசை தொட வேண்டுமே 
தலைபாரம் நீங்கிடவே திடம் வேண்டுமே – 2
என் விழியை உமிழ் நீரால் தொட வேண்டுமே 
தெளிவான பார்வை நானும் பெற வேண்டுமே – 2
                   2
என் செவியில் உன் விரல்கள் இட வேண்டுமே 
உன் வார்த்தை நானும் இனி கேட்க வேண்டுமே – 2 
என் நாவின் கட்டுகளும் அவிலவேண்டுமே 
நாவலே உன் நாமம் புகழ வேண்டுமே -2
                   3
என் நெஞ்சை உன் கரங்கள் தொடவேண்டுமே 
மனக்காயம் யாவும் இன்று மறைய வேண்டுமே – 2
என் கால்களில் முடக்குவாதம் நீங்கவேண்டுமே 
மான்போல துள்ளி எழுந்து துதிக்க வேண்டுமே -2 

Thursday 13 July 2017

இதய அன்பு பொங்கி (Idhaya anbu pongi song)



lyrics
 
இதய அன்பு பொங்கிவழியும் உந்தன் சந்நிதி
என் வாழ்வின் நிம்மதி 
இமைகள் திறந்து விழிகள் பேச 
இதயம் காணுதே புது வாழ்வின் நிம்மதி 
நீயே நிம்மதி .. நீயே நிம்மதி 
                1
கால்கள் சோர்ந்து வீழும்போது நீயே நிம்மதி 
மனக் கவலையினால் வாழும்போது நீயே நிம்மதி 
வாழ்வின் சுமைகள் அழுத்தும் போது நீயே நிம்மதி 
புது வசந்தமாக என்னில் வந்தாய் நீயே நிம்மதி
நீயே நிம்மதி .. நீயே நிம்மதி
                  2
அமைதி தேடி வந்தபோது நீயே நிம்மதி - என் 
ஆறுதலாய் ஆனவரே நீயே நிம்மதி 
சுகமளிக்கும் மருத்துவரே நீயே நிம்மதி - என்னில் 
அதிசயங்கள் செய்பவரே நீயே நிம்மதி 
நீயே நிம்மதி .. நீயே நிம்மதி

Yesu namam pada pada song(இயேசு நாமம் பாடப் பாட இனிமை பொங்குதே பாடல்)

lyrics இயேசு நாமம் பாடப் பாட இனிமை பொங்குதே - அவர் இல்லம் வாழ எந்தன் இதயம் (ஏங்கித் தவிக்குதே ) - 2 1 ஓங்கும் ...