lyrics
உம்மால் கூடுமே எல்லாம் கூடுமே
எல்லாம் கூடுமே உம்மால் கூடுமே
ஆண்டவரே தாவீதின் திருமகனே – 2
மனமிரங்கும் மனமிரங்கும் என் மீது மனமிரங்கும் – 2
1
உன் கரங்கள் என்சிரசை தொட வேண்டுமே
தலைபாரம் நீங்கிடவே திடம் வேண்டுமே – 2
என் விழியை உமிழ் நீரால் தொட வேண்டுமே
தெளிவான பார்வை நானும் பெற வேண்டுமே – 2
2
என் செவியில் உன் விரல்கள் இட வேண்டுமே
உன் வார்த்தை நானும் இனி கேட்க வேண்டுமே – 2
என் நாவின் கட்டுகளும் அவிலவேண்டுமே
நாவலே உன் நாமம் புகழ வேண்டுமே -2
3
என் நெஞ்சை உன் கரங்கள் தொடவேண்டுமே
மனக்காயம் யாவும் இன்று மறைய வேண்டுமே – 2
என் கால்களில் முடக்குவாதம் நீங்கவேண்டுமே
மான்போல துள்ளி எழுந்து துதிக்க வேண்டுமே -2
No comments:
Post a Comment