lyrics
எனது இருதய அன்பில் நிலைத்திருந்தால்
எல்லா நன்மைகளும் நீங்கள் பெறுவீர்கள் – 2
1
சுமை சுமந்து சோர்ந்த என் இதயங்களே
உங்களின் துயரம் எந்தன் தோள்களிலே
உங்களுக்காக நான் பிறந்தேன்
சிலுவை மரத்தில் இரத்தம் சிந்தினேன்
கல்வாரியில் பலியானேன் ஆ.. ஆ.. ஆ..
2
ஏழை எளிய மனதோடு வாழ்பவரே
மனதினில் தாழ்ச்சியும் இரக்கமும் உள்ளோரே
விண்ணகப் பேரின்பம் உங்களுக்கே
என் திருக்கரங்களால் ஆசீர் அருள்வேன்
இதயத்தில் சுமந்திடுவேன் ஆ.. ஆ.. ஆ..

No comments:
Post a Comment