lyrics
என் சுமை எளிது என் நுகம் இனிது
என்று மொழிந்தவரே
வருந்தி சுமக்கும் மாந்தரே என்னிடம்
வாருங்கள் என்றவரே
நீரே என் அடைக்கலம் – 2
இயேசுவின் இருதயமே – இறை
இயேசுவின் இருதயமே
1
இரக்கத்தின் ஊற்றாம் இறைவா
எம் ஜெபம் கேட்டருள்வீர்
ஏழைகளை செல்வராக்கும்
இதயமே உமதன்றோ – கருணை
இதயமே உமதன்றோ
2
நீயல்லால் உலகில் வேறு
நிலையான அரண் இல்லையே
தாய் என்னை வெறுத்திட்ட போதும்
நீ என்னை மறப்பதில்லை – என்றும்
நீ என்னை இகழ்வதில்லை

No comments:
Post a Comment