lyrics
இருதய அரசே நீர் வாழ்க – எம்
இதயங்களில் உம தயை வாழ்க
இடைக்காட்டூர் மண்ணில் அமர்ந்தவரே
எம்மை இடைவிடாது தினம் காப்பாவரே – 2
எந்த தீங்கும் விளக்கி காத்திடுவீர்
1
அளவற்ற மகத்துவம் நிறைந்தவரே – என்றும்
தாளம் சிநேகம் நிறைந்தவரே – 2
இதயமெல்லாம் எம்மை ஆள்பவரே – தினம்
நிறைவினை ஆக்கும் தூயவரே
எல்லா ஆராதனைக்கும் உரியவரே
2
பொறுமையும் தயாளமும் நிறைந்தவரே
விண்ணக வாசலாய் இருப்பாவரே – 2
இறைவனின் புனித ஆலயமாய் இங்கு
அரசாட்சி செய்யும் உன்னதரே
எங்கள் பாவம் முழுதும் தீர்ப்பவரே

No comments:
Post a Comment