lyrics
அன்பின் தேவ நற்கருணையிலே அழியாப் புகழோடு வாழ்பவரே அன்புப் பாதையில் வழினடந்தே அடியோர் வாழ்ந்திட துணை செய்வீர் 1 அற்புதமாக எமைப் படைத்தீர் தற்பரன் நீரே எமை மீட்டீர் பொற்புடன் அப்ப ரசகுணத்தில் எப்பொழுதும் வாழ் இறைவனாவீர் எத்தனை வழிகளில் உமதன்பை எண்பிதெமை நீர் ஆட்கொண்டீர் 2 கல்வாரி மலையின் சிகரமதில் கனிவுடன் தினம் என்னை நிலைநிறுத்தும் நற்கருணை விசுவாசமதில் நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர் இளமையின் பொலிவால் திகழ் திருச்சபையும் யாவரும் வாழ தயை புரிவீர்
No comments:
Post a Comment