lyrics
சரணம் சரணம் இதயம் சரணம்
இயேசுவின் இதயம் சரணமே
அன்பின் முழுமை இதயம் சரணம்
இயேசுவின் இதயம் சரணமே
தேற்றும் இதயமே ஆசீர் வழங்குமே
அணைக்கும் இதயமே என்றும் சரணம் சரணமே
1
இருதய அன்பில் ஆனந்தம் பொங்கிடும்
இறைவழி வாழ ஆறுதல் நிறைந்திடும் – 2
அன்னைபோல நம்மைத் தாங்கும்
இயேசுவின் இதயம் சரணம் சரணம்
2
இருதய அன்பில் புதுமைகள் நிறைந்திடும்
குறையின்றி வாழ நல்வழி கிடைத்திடும் – 2
பாதை தந்து பயணம் செல்ல
நடத்தும் இதயம் சரணம் சரணம்
3
இருதய அன்பில் வரங்களை பொழிந்திடும்
நோயின்றி வாழ நலம்பல வழங்கிடும் – 2
விரும்பி வந்து குணமளிக்கும்
இதய ஆண்டவா சரணம் சரணம்
No comments:
Post a Comment